வாலிபர் மீது வழக்கு

வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-04-22 18:25 GMT
விருதுநகர்,
விருதுநகர் சத்ரிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் கடந்த 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. பந்தல்குடியை சேர்ந்த ஆசிரியர் பரமேசுவரி தேர்தல் அதிகாரியாக இருந்தார். இந்த வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த விருதுநகர் நீராலி தெருவை சேர்ந்த குணசேகரன் (வயது26) வாக்குப்பதிவு எந்திரத்தில் முதல் பட்டனை அழுத்தினால் 2 பட்டனில் வாக்குபதிவாவதாக புகார் தெரிவித்தார். இதையடுத்து அந்த வாக்குப்பதிவு எந்திரத்தை பரிசோதனை செய்த போது புகார் தவறு என்பது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் போலீசார் முதல் மாஜிஸ்திரேட்டு மருதுபாண்டியின் அனுமதி பெற்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 128 பிரிவின்கீழ் குணசேகரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மேலும் செய்திகள்