கொரோனா பரவல் காரணமாக செல்போனில் குடிநீர் கட்டண விவரம்

கொரோனா பரவல் காரணமாக குடிநீர் கட்டண விவரம் செல்போனில் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-22 18:07 GMT
கோவை
கொரோனா பரவல் காரணமாக குடிநீர் கட்டண விவரம் செல்போனில் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவா் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

குடிநீர் கட்டணம் 

கோவை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கத்துக்கு முன்பு இருந்த பகுதிகளில் உள்ள 60 வார்டுகளில், 2 மாதங்களுக்கு ஒருமுறை குடிநீர் கணக்கெடுக்கப்பட்டு, பயனாளிகளிடம் உள்ள அட்டையில் பயன்ப டுத்தப்பட்ட அளவும், செலுத்த வேண்டிய தொகையும் பதிவு செய்யப்படுகிறது. 

பயனாளிகள் அந்த அட்டையை மாநகராட்சியின் வரி வசூலிப்பு மையத்தில் காண்பித்து குடிநீர் கட்டணம் செலுத்தி வருகின்றனர். 

தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதால் குடிநீர் அளவெடுப்பவர், பயனாளிகள் மற்றும் வரிவசூல் மைய பணியாளர்கள் ஆகியோருடன் நேரடி தொடர்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் மாறுதல் செய்யப்படுகிறது. 

செல்போனில் தகவல் 

இனி வரும் காலங்களில் குடிநீர் அளவு கணக்கு எடுக்கப்பட்டு, பயனாளியின் செல்போனுக்கு, குடிநீர் பயன்படுத்தப்பட்ட அளவு, செலுத்த வேண்டிய தொகை மற்றும் செலுத்த வேண்டிய கடைசி தேதி ஆகிய விவரங்கள் குறுந்தகவல் மூலம் அனுப்பப்படும்.

பயனாளிகள் தங்கள் செல்போனுக்கு வந்த குறுந்தகவலை மாநகராட்சி வரி வசூல் மையத்தில் காண்பித்து தொகையை செலுத்தலாம். பொதுமக்கள் அனைவரும் தாங்கள் மேற்கண்ட வசதியினை பயன்படுத்தி செலுத்த வேண்டிய கட்டணத்தை குறித்த நாட்களுக்குள் செலுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்