கல்லூரி மாணவி மாயம்

கல்லூரி மாணவி மாயம் ஆனார்.

Update: 2021-04-22 18:01 GMT
நொய்யல்
நொய்யல் அருகே சேமங்கி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகள் நவினா (வயது 18). இவர் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூரில் உள்ள ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ. தமிழ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சுப்பிரமணி வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்தபோது நவினாவை காணவில்லை. இதையடுத்து சுப்பிரமணி தனது மகளை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சுப்பிரமணி கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்