ஜெகதாபி அரசு மேல்நிலைப்பள்ளியில் மூலிகை தோட்டம் அமைப்பு
ஜெகதாபி அரசு மேல்நிலைப்பள்ளியில் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டது.
வெள்ளியணை
கரூர் மாவட்டம், ஜெகதாபி அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளியில் இந்துஸ்தான் சாரண சாரணியர் இயக்கம் சார்பில் மூலிகை தோட்டம் அமைக்க பள்ளி வளாகத்தில் இடம் தேர்வு செய்து, மண்ணை சமன்படுத்தி வேலி அமைக்கப்பட்டது. பின்னர் மருத்துவம் குணம் கொண்ட பல வகையான மூலிகை செடிகள், மூலிகை மரங்கள் ஆகியவை நடப்பட்டு மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டது. இந்த மூலிகை தோட்டத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இதனை பள்ளியின் தலைமையாசிரியர் தீனதயாளன் தலைமை தாங்கி திறந்து வைத்தார். மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு ஆரோக்கியராஜ், இந்துஸ்தான் சாரண, சாரணியர் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், இந்துஸ்தான் சாரண சாரணியர் இயக்க தலைமையக ஆணையர் சந்திரசேகர், பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.