நச்சலூர்
நச்சலூர் பகுதியில் அரசு மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதாக குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்துள்ளது. தகவலின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது மது விற்று கொண்டிருந்த நச்சலூர் ரெட்டைவாய்க்கால் பகுதியில் பாலன் (வயது 42), வி.ஆர்.ஓ.காலனியில் பூமாலை (55), நெய்தலூர் காலனி பகுதியில் சுப்பிரமணியன் (58), நாகராஜ் (45), மேலப்பட்டியில் பாலசுப்பிரமணியன் (43), சூரியனூரில் லெட்சுமணன் (43) ஆகியோர் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 66 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.