பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திடியவருக்கு 14½ மாதங்கள் சிறை தண்டனை
பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திடியவருக்கு 14½ மாதங்கள் சிறை தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கரூர்
கரூர் டவுன் போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தஞ்சாவூர் மாவட்டம் வீரசிங்கம் பட்டியை சேர்ந்த ஆஸ்டின் (வயது 51) என்பதும், அவர் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து கரூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து வழக்கு விசாரணை முழுவதும் முடிந்த நிலையில் நேற்று நீதிபதி சரவணபாபு தீர்ப்பு கூறினார். இதில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடிய ஆஸ்டினுக்கு 14½ மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து அவரை போலீசார் கரூர் கிளை சிறையில் அடைத்தனர்.