நொய்யல்
நொய்யல் குறுக்குச் சாலையில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சுதமதி, டாக்டர் சத்தியேந்திரன் ஆகியோர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ரத்த மாதிரி எடுத்து ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்தத்தில் ரத்த அழுத்த அளவு குறித்தும், உடலில் ரத்த அழுத்த அளவு குறித்தும் பரிசோதனை செய்தனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சத்து மாத்திரை மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.