பழ வியாபாரி சாவு
கொடைரோடு அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதி பழ வியாபாரி பலியானார்.
திண்டுக்கல்:
கொடைரோடு அருகேயுள்ள ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 43). பழ வியாபாரி.
கடந்த 20-ந்தேதி இவர், மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்லுக்கு சென்றுவிட்டு கொடைரோட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் நாகையகவுண்டன்பட்டி பிரிவு என்னுமிடத்தில் மதுரை நோக்கி சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த சரவணக்குமார் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சரவணக்குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.