மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

திண்டுக்கல் அருகே மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளி ஒருவர் இறந்தார்.

Update: 2021-04-22 17:09 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் அருகே உள்ள ம.மூ.கோவிலூரை அடுத்த வன்னியபட்டியை சேர்ந்தவர் பால்சாமி (வயது 50). கட்டிட தொழிலாளி. 

நேற்று முன்தினம் இவர், ம‌.மூ.கோவிலூர் பிரிவு அருகே லியாகத்அலி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சாரம் கட்டி கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தார். 

அந்த வீட்டின் அருகே சென்ற உயர் மின் அழுத்த கம்பி மீது பால்சாமி உரசியதில், அவருடைய உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

 இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு பால்சாமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்