இரும்பு பொருட்களை திருடியவர் கைது

இரும்பு பொருட்களை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-04-22 16:14 GMT
ஆலங்குளம், 
ஆலங்குளம் சிமெண்டு ஆலை காலனியில் 180 வீடுகள் உள்ளன. தற்போது 40 வீடுகளில் மட்டுமே குடியிருந்து வருகின்றனர். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அம்மாபட்டி கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் அஜித்குமார் (வயது21) என்பவர் இந்த பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள குழாய், இரும்பு பொருட்களை  திருடி உள்ளார். குடியிருப்பில் வசிப்பவர்கள் கொடுத்த புகாரின் பேரில், ஆலங்குளம் சப்-இன்ஸ்பெக்டர் செண்பகவேலன் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தார்.

மேலும் செய்திகள்