பெரியகுளத்தில் சீரடி சாய்பாபா ஜெயந்தி விழா

பெரியகுளத்தில் சீரடி சாய்பாபா ஜெயந்தி விழா நடந்தது.

Update: 2021-04-22 15:53 GMT
பெரியகுளம்:
பெரியகுளம் தென்கரையில் சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலில் சாய்பாபா ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நேற்று காலை 6.30 மணிக்கு ஆரத்தியுடன் பூஜை தொடங்கியது. பின்னர் விக்னேஸ்வர ஹோமம் உள்பட பல்வேறு வகையான பூஜை நடைபெற்றது. பாபாவிற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மாலையில் சாவடி ஊர்வலம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்த சாய்பாபாவிற்கு ஆரத்தி எடுத்து சிறப்புவழிபாடு நடைபெற்றது. 
விழாவை முன்னிட்டு கோவிலில்  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர் கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்