தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.11 லட்சம்
தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.11 லட்சம் கிடைத்தது.
தென்காசி:
தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் 13 நிரந்தர உண்டியல்கள் உள்ளன. இந்த கோவிலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 11, 12-ந்தேதிகளில் உண்டியல் திறந்து காணிக்கை பணம் எண்ணப்பட்டது. அதன்பிறகு நேற்று மீண்டும் உண்டியல்கள் அனைத்தும் திறந்து எண்ணப்பட்டன. இதில் மொத்தம் ரூ.11 லட்சத்து 12 ஆயிரத்து 88 காணிக்கையாக கிடைத்தது. மேலும் 18 கிராம் தங்கமும், 151 கிராம் வெள்ளியும் கிடைத்தன.
இந்த உண்டியல் திறப்பு நிகழ்ச்சியில் கண்காணிப்பாளராக பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோவில் உதவி ஆணையாளர் அருணாச்சலம் இருந்தார். அறநிலையத்துறை தென்காசி பிரிவு ஆய்வாளர் சரவணகுமார், தக்கார் பிரதிநிதி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். உண்டியல் திறப்புக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன் செய்திருந்தார்.