ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை

ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை செய்து கொண்டார்

Update: 2021-04-21 20:37 GMT
திருமங்கலம்
திருமங்கலம் என்.ஜி.ஓ. நகரை சேர்ந்தவர் ஜேம்ஸ் பிரபாகர் (வயது 54). இவர் ஆலம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அத்துடன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் ஜேம்ஸ் பிரபாகர் மனைவி சலோமி வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் தனியே இருந்த ஜேம்ஸ் பிரபாகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்