வெறிநாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி

கீழக்கரை அருகே வெறிநாய்கள் கடித்த 10 ஆடுகள் பலியானது.

Update: 2021-04-21 19:07 GMT
கீழக்கரை,

கீழக்கரை அருகே ஆழ்வார் கூட்டத்தை சேர்ந்தவர் சுந்தரசாமி (வயது 39). விவசாயி. இவர் நீண்ட காலமாக ஆடுகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இவரிடம் 60 செம்மறி ஆடுகள் உள்ளன. இவருடைய ஆட்டு மந்தைக்குள் இரவு நேரத்தில் 8 வெறிநாய்கள் புகுந்து ஆடுகளை கடித்துள்ளன. அதில் 10 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மீதமுள்ள ஆடுகள் சிதறி ஓடிவிட்டன. ஆடுகள் அலறும் சத்தம் கேட்டதும் ஆட்டின் உரிமையாளர் விரைந்து சென்று மீதமுள்ள ஆடுகளை காப்பாற்றினார். நாய்கள் அங்கிருந்து ஓடி விட்டன. எனவே தில்லையேந்தல் ஊராட்சி நிர்வாகம் இப்பகுதியில் சுற்றித்திரியும் வெறி நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்