மூதாட்டி தற்கொலை

இளையான்குடி அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-04-21 18:06 GMT
இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி பத்மா(வயது 62). கணவன்-மனைவி இருவரும் முத்துமாரி அம்மன் கோவிலில் கண்மலர் வியாபாரம் செய்து வந்தனர். இந்த நிலையில் உடல்நிலை குறைவால் பத்மா மருத்துவ சிகிச்சை பெற்று வந்து உள்ளார். இருப்பினும் நோய் குணமாகாததால் விரக்தி அடைந்தார்.
இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த பத்மா எலிபேஸ்ட் என்ற விஷத்தை அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் இளையான்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்