நொய்யல்
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையத்தில் உள்ள துணைஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சத்தியேந்திரன் தலைமையில் மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு ரத்த மாதிரி எடுத்து ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்தத்தில் ரத்த அழுத்த அளவு, அதேபோல் உடலில் ரத்த அழுத்த அளவு குறித்தும் பரிசோதனை செய்தனர். பின்னர் சத்து மாத்திரைக் வழங்கப்பட்டது.