கோவைக்கு 46,270 டோஸ் கொரோனா தடுப்பூசி வந்தது
கோவைக்கு 46,270 டோஸ் கொரோனா தடுப்பூசி வந்தது
கோவை
சென்னையில் இருந்து கோவைக்கு கோவிஷீல்டு தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டு,. உடனடியாக அனைத்து மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அதை்தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து சுகாதார துறையினர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்திற்கு 46 ஆயிரத்து 270 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் 19 ஆயிரத்து 800 தடுப்பூசிகளை மட்டுமே தற்போது பயன்படுத்திக்கொள்ளவும், மற்றவற்றை அவசரத் தேவைக்காக இருப்பில் வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்ற உடன் அனைத்து அரசு மையங்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இது தவிர சுகாதாரத்துறை அலுவலகத்தில் பதிவு செய்திருந்து காத்திருந்த தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் தடுப்பூசிகள் உடனடியாக வழங்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.