சினிமா பாடல் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீஸ்காரர்

சினிமா பாடல் மூலம் போலீஸ்காரர் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்.

Update: 2021-04-21 13:54 GMT
கூடலூர்,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொது இடங்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்று பொதுமக்களை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். 

இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வசூலித்து வருகின்றனர். மேலும் கிராமம், கிராமமாக சென்று கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் கூடலூர் நகர பகுதியில் போலீஸ்காரர் மஞ்சுநாத் என்பவர் ஒலிபெருக்கி மூலம் சினிமா பாடல்களை போல கொரோனா தடுப்பு குறித்த பாடல்களை பாடி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார். அவரது செயலை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். 

மேலும் செய்திகள்