ஏர்வாடி அருகே ஒற்றை யானை அட்டகாசம்; வாழை மரங்கள் சேதம்
ஏர்வாடி அருகே ஒற்றை யானை வாழை மரங்களை சாய்த்து அட்டகாசம் செய்தது.
ஏர்வாடி:
வடக்கு சாலைப்புதூரை சேர்ந்தவர் சுயம்புலிங்கம் (வயது 48). விவசாயி. இவருக்கு சொந்தமான விளைநிலங்கள் சாலைப்புதூர் ஊருக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒற்றை காட்டு யானை விவசாயி சுயம்புலிங்கம் விளைநிலத்திற்குள் புகுந்து அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட வாழைகளை சாய்த்து அட்டகாசம் செய்தது. எனவே அந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டவும், யானை நாசம் செய்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.