கல்லை தூக்கிப்போட்டு வாலிபர் கொலை

சோழவந்தான் அருகே கல்லை தூக்கிப்போட்டு கணவரை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-04-20 20:35 GMT
சோழவந்தான்
சோழவந்தான் அருகே கல்லை தூக்கிப்போட்டு கணவரை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
அடிக்கடி தகராறு
திண்டுக்கல் மாவட்டம் முத்தழகுப்பட்டி தெற்கு வீதியை சேர்ந்தவர் டைசன் ராஜா(வயது 33). இவருக்கும், மதுரை வாடிப்பட்டி அருகே பொம்பன்பட்டியை சேர்ந்த எஸ்ரா(28) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் பொம்பன்பட்டியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.  டைசன்ராஜாவிற்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் டைசன் ராஜா இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எஸ்ரா, கணவர் மீது கல்லை தூக்கிப்போட்டு விட்டு தப்பியோடி விட்டார். 
கைது
இதில் பலத்த காயமடைந்த டைசன் ராஜா, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிக்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சோழவந்தான் போலீசில் புகார் செய்யப்பட்டது. 
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜசுலோசனா, சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய எஸ்ராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்