கொட்டாம்பட்டி அருகே தோட்டத்திற்குள் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

கொட்டாம்பட்டி அருகே தோட்டத்திற்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

Update: 2021-04-20 20:34 GMT
கொட்டாம்பட்டி
கொட்டாம்பட்டி அருகே தோட்டத்திற்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மலைப்பாம்பு
கொட்டாம்பட்டி அருகே உள்ள குன்னாரம்பட்டி கிராமத்தில் அங்குள்ள விவசாயி ஒருவரின் தென்னந்தோட்டத்திற்குள் தென்னங்கீற்றுகளை அடுக்கி வைத்து கொண்டிருந்தனர். அப்போது சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு அதற்குள் பதுங்கி இருந்தது. கிடந்தது. 
இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் இதுகுறித்து கொட்டாம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். 
நடவடிக்கை
வனத்துறை வனகாவலர் சங்கபிள்ளை மற்றும் வனத்துறையினர் அங்கு வந்தனர். அவர்களிடம் மலைபாம்பை கிராம மக்கள் ஒப்படைத்தனர். 
இதையடுத்து அருகிலுள்ள மலைப்பகுதியில் கொண்டு சென்று மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக விட்டனர். கோடை காலம் என்பதால் கொட்டாம்பட்டி பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து வன உயிரினங்கள் தண்ணீர் மற்றும் இரைதேடி மக்கள் வசிப்பிடங்களுக்கு வருகின்றன. 
இதனை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்