போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்
வார ஓய்வு நாளை பறிக்க கூடாது. போக்குவரத்து கழக விடுப்பு விதிகளை மாற்றக் கூடாது. சம்பள பறிப்பு செய்யக்கூடாது. தொழிலாளர் துறை அறிவுரையை மீறக் கூடாது. பணிக்கு வந்த தொழிலாளர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருமாநிலையூரில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சி.ஐ.டி.யூ. துணை பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். எல்.பி.எப். செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். இதில் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர்.