பெரம்பலூர் மாவட்டத்திற்கு போதிய அளவு கொரோனா தடுப்பூசி உள்ளது
பெரம்பலூர் மாவட்டத்திற்கு போதிய அளவு கொரோனா தடுப்பூசி உள்ளதாக கலெக்டர் தரிவித்தார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மற்றும் அனைத்து பிரிவினருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையில் நேற்று நடந்தது. அப்போது அவர் கூறுகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனை 2 தனியார் மருத்துவமனைகள் 29 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் 15 மினி கிளினிக்குகள் மற்றும் 23 சிறப்பு முகாம்கள் என 70 இடங்களில் வைத்து தினமும் 600 முதல் 700 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 26 ஆயிரத்து 103 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் தேவையான அளவு கொரோனா தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. பொதுமக்கள் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றார்.