பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு செய்முறை தேர்வு
பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது.
தாமரைக்குளம்
அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 8 ஆயிரத்து 577 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக 30 பள்ளிகளில் நேற்று முதல் 19-ந் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக 20-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 30 பள்ளிகளுக்கு நடைபெற உள்ளது. செய்முறை தேர்வானது காலை, மாலை என இரண்டு வேளை நடைபெறுகிறது. ஒவ்வொரு குழுவிற்கும் 20 முதல் 25 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். காலை செய்முறை தேர்வு முடிந்த பின்பு ஆய்வக அறையானது சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மாலை செய்முறை தேர்வுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.