12 ஆயிரத்து 541 மாணவர்களுக்கு பிளஸ்-2 செய்முறை தேர்வு
நாகை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 541 மாணவர்களுக்கு பிளஸ்-2 சய்முறை தேர்வு நடைபெற்றது. இதில் முககவசம் அணிந்து மாணவர்கள் பங்கேற்றனர்
நாகப்பட்டினம்;
நாகை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 541 மாணவர்களுக்கு பிளஸ்-2 சய்முறை தேர்வு நடைபெற்றது. இதில் முககவசம் அணிந்து மாணவர்கள் பங்கேற்றனர்.
செய்முறை தேர்வுகள்
தமிழகத்தில் பிளஸ்- 2 பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறை தேர்வுகள், நேற்று தொடங்கியது. இந்த தேர்வுகள் வருகிற 23-ந் தேதி வரை நடைபெற உள்ளன. நாகை மாவட்டத்தில் காலை 9 மணிக்குத் செய்முறை தேர்வுகள் தொடங்கியது. இதில் மாணவ-மாணவிகள் ஒவ்வொரு குழுக்களாக பிரிக்கப்பட்டு தேர்வு மையத்துக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
முககவசம்
இயற்பியல், உயிரியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டன. அதன்படி மாவட்டத்தில் 104 தேர்வு மையங்களில் 12 ஆயிரத்து 541 மாணவ-மாணவிகள் செய்முறை தேர்வில் பங்கேற்றனர். தேர்வு மையங்களில் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி மாணவ- மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலைப்பள்ளியில் காலை முதல் மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் செய்முறைத்தேர்வில் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்தபடி மாணவிகள் செய்முறை தேர்வில் கலந்து கொண்டனர்.