தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருப்புவனம்,
திருப்புவனம் போலீஸ் சரகத்தை சேர்ந்தது தட்டான்குளம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியநாதன் (வயது51). விவசாயக் கூலி தொழிலாளியான இவர் வயிற்றுவலி பிரச்சினையால் கடும் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகிறார்.