கொரோனா தடுப்பூசி திருவிழா

கொரோனா தடுப்பூசி திருவிழா நடந்தது.

Update: 2021-04-16 16:44 GMT
காரைக்குடி, 

சிவகங்கை மாவட்ட கலெக்டரின் உத்தரவின்பேரில் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கோவிலூரில் உள்ள டி.சி.பி. தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி மற்றும் தொழிற்சாலை பொதுமேலாளர் கணேஷ் ஆகியோர் மேற்பார்வையில் தடுப்பூசி திருவிழா என்னும் கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சாக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தராஜ், மாவட்ட பூச்சியியல் வல்லுனர் ரமேஷ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன் மற்றும் சுகாதாரத் துறையினர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்