ஆரணி அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு
ஆரணி அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு
ஆரணி
ஆரணியை அடுத்த குண்ணத்தூர் கஜராஜ் என்பவரின் மகள் வைத்தீஸ்வரி (வயது 29). நிலத்தில் விளைந்த நெல் மணிகளை மூட்டை கட்டுவதற்காக சேவூர் ஊராட்சியில் உள்ள அரிசி ஆலையில் இருந்து கோணிப்பைகளை வாங்கிக் கொண்டு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். குண்ணத்தூர் புதுரோடு வழியாக சென்றபோது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் வைத்தீஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் மற்றும் 3 பவுன் என 2 செயினையும் பிடித்து இழுத்துள்ளனர்.
சுதாரித்துக்கொண்ட வைத்தீஸ்வர் செயினை கையில் பிடித்துக்கொண்டார். இதனால் ஒரு பவுன் செயினின் ஒரு பகுதி மட்டும் வைத்தீஸ்வரி கையில் சிக்கிக்கொண்டது. மீதமுள்ள செயினை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.
இதில் கழுத்தில் காயமடைந்த வைத்தீஸ்வரி ஆரணி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.