யோகிபாபு நடித்த மண்டேலா படத்தை தடை செய்ய வேண்டும். முடிதிருத்துவோர் நலச் சங்கத்தினர் மனு.
யோகிபாபு நடித்த மண்டேலா படத்தை தடை செய்ய வேண்டும். முடிதிருத்துவோர் நலச் சங்கத்தினர் மனு.
ஆரணி
தமிழ்நாடு முடிதிருத்துவோர் தொழிலாளர் நலச்சங்கத்தின் ஆரணி கிளை தலைவர் வி.சீனுவாசன், செயலாளர் வி.திருமுருகன், பொருளாளர் வி.கார்த்தி, கவுரவ தலைவர் முரளி மற்றும் நிர்வாகிகள் நேற்று ஆரணி நகர போலீஸ் நிலையத்தில் மனு ஒன்றை அளித்தனர். அதில், ‘‘சமீபத்தில் நடிகர் யோகிபாபு நடித்து திரைக்கு வந்துள்ள ‘மண்டேலா’ திரைப்படத்தில் சவரத் தொழிலை இழிவாக பேசுவதாக வரும் காட்சிகளை ரத்து செய்ய வேண்டும், படத்தை திரையிடக்கூடாது. தடை செய்ய வேண்டும்’’ என கூறியிருந்தனர். அதனை பெற்றுக்கொண்ட ஆரணி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சி.எஸ்.ஆர். தருவதாக கூறினார்..