தூத்துக்குடியில் மீன் வியாபாரியிடம் ரூ.1.58 லட்சம் திருடியவர் கைது
தூத்துக்குடியில் மீன் வியாபாரியிடம் ரூ.1.58 லட்சம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில், மீன்வியாபாரியிடம் ரூ.1.58 லட்சம் திருடியவர் கைது
செய்யப்பட்டார்.
மீன்வியாபாரி
தூத்துக்குடி பூபாலராயர்புரம் 4-வது தெருவை சேர்ந்தவர் அலெக்ஸ் கோமஸ் (வயது 62). மீன் வியாபாரி. சம்பவத்தன்று இவர் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மீன் ஏலம் எடுப்பதற்காக ஒரு கைப்பையில் ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் பணத்துடன் மீன்பிடி துறைமுகத்துக்கு வந்தார். அங்கு உள்ள மீன் ஏலக்கூடம் அருகே அமர்ந்து செல்போனில் பேசிக் கொண்டு இருந்தாராம்.
திருட்டுஇதனால் தனது கைப்பையை அருகில் வைத்து உள்ளார். சிறிது நேரத்தில் கைப்பையை பார்த்த போது, யாரோ மர்ம நபர் பணத்துடன் கைப்பையை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
கைது
இது குறித்து அலெக்ஸ் கோமஸ் தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
விசாரணையில், பாத்திமாநகர் 6-வது தெருவை சேர்ந்த ஆஸ்வால்ட் மகன் எத்தல்பட் (32) என்பவர் பணத்தை திருடி இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் எத்தல்பட்டையை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்தை மீட்டனர்.