சேலம் மத்திய சிறை சூப்பிரண்டுக்கு கொரோனா

சேலம் மத்திய சிறை சூப்பிரண்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-04-15 21:19 GMT
சேலம்:
சேலம் மத்திய சிறை சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர் தமிழ்செல்வன். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா பரிசோதனை செய்ததில், அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறை சூப்பிரண்டு தமிழ்செல்வன், சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள், ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்