சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது
சேலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 175 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 195 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 110 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஓமலூரில் 15 பேர், மேட்டூரில் 9 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 8 பேர், நங்கவள்ளி, பெத்தநாயக்கன்பாளையம், பனமரத்துப்பட்டியில் தலா 6 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
வாழப்பாடி, எடப்பாடியில் தலா 4 பேர், வீரபாண்டி, ஆத்தூர், தலைவாசல், நரங்சிங்கபுரம், கொளத்தூரில் தலா 3 பேர், சேலம் ஒன்றியம், சங்ககிரி, தாரமங்கலம், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய பகுதிகளில் தலா 2 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
35 ஆயிரத்தை தாண்டியது
அதே போன்று காடையாம்பட்டி, மேச்சேரியில் தலா ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 51 வயதுடைய ஒரு பெண், 52 வயதுடைய ஒரு ஆண் என 2 பேர் நேற்று கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நேற்று 35 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நேற்று வரை மாவட்டத்தில் மொத்தம் 35 ஆயிரத்து 136 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.