சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் வட்டார விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் வீடு சார்ந்த விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு மற்றும் விடுமுறை சம்பளம் ஆகியவை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கரன்கோவில் - புளியங்குடி சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விசைத்தறி தொழிலாளர் சங்க தலைவர் ரத்தினம் தலைமை தாங்கினார். செயலாளர் லட்சுமி, பொருளாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் வேல்முருகன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பாலுச்சாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில் விசைத்தறி தொழிலாளர்கள் சங்க துணை தலைவர் சுப்பிரமணியன், நிர்வாகி சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையே கோரிக்கையை வலியுறுத்தி புளியங்குடி பகுதியிலும் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.