அனைத்து பணியாளர்களுக்கும் தடுப்பூசி போட கோரிக்கை
அனைத்து பணியாளர்களுக்கும் தடுப்பூசி போட கோரிக்கை
மதுரை,ஏப்.
டி.ஆர்.இ.யூ மதுரை கோட்ட செயலாளர் சங்கரநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மதுரை கோட்ட ரெரயில்வே நிர்வாகம் சிறப்பாக பணியாற்றி வருகிறது. இதற்காக மதுரை ரெயில்வே ஆஸ்பத்திரியில் அனைத்து பணியாளர்களும் முழுமூச்சுடன் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றி வருகின்றனர். ஆனால் மதுரை கோட்ட ெரயில்வேயின் கீழ் திண்டுக்கல், நெல்லை, செங்கோட்டை, கேரள மாநிலம் கொல்லம் மற்றும் ராமேசுவரம் ஆகிய இடங்களில் மருத்துவ மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தடுப்பூசி போடப்படுவது இல்லை. எனவே இந்த மையங்களிலும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கையை கோட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.