களக்காடு பகுதியில் மேலும் 5 பேருக்கு கொரோனா

களக்காடு பகுதியில் மேலும் 5 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.

Update: 2021-04-15 18:48 GMT
களக்காடு, ஏப்.16-

களக்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. களக்காடு அருகே உள்ள வடக்கு சாலைப்புதூரில் 22 வயது வாலிபரும், சுப்பிரமணியபுரத்தில் 62 வயது முதியவரும், காடுவெட்டியில் 21 வயது வாலிபரும், 57 வயதான ஆண் நபரும், திருக்குறுங்குடி மேலரதவீதில் 66 வயது முதியவரும் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் 5 பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதேபோல் ஏர்வாடி டோனாவூரில் உள்ள ஒரு வங்கியில் பணியாற்றி வரும் நெல்லையை சேர்ந்த ஊழியருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர் தேர்தல் பணிக்கு சென்று வந்த நிலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனைதொடர்ந்து சுகாதார ஊழியர்கள் வங்கியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்