கீரமங்கலம் பகுதியில் சூறைக்காற்றுடன் கன மழை

கீரமங்கலம் பகுதியில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்ததால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன

Update: 2021-04-15 18:33 GMT
கீரமங்கலம்
கடும் வெயிலுக்கு மத்தியில் தற்போது தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில்  மழை பெய்து வருகிறது. அந்தவகையில் நேற்று கீரமங்கலம், மேற்பனைக்காடு உள்பட பல கிராமங்களில் மதியம் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் வரை இந்த மழை பெய்தது. இதனால் கீரமங்கலம் பஸ் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் சாலையில் தேங்கி நின்றது. இதனால் நடந்து சென்றவர்கள் வாகன ஓட்டிகள் அதிகளவு சிரமப்பட்டனர்.சூறைக்காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக மேற்பனைக்காடு கிராமத்தில் பல இடங்களில் வீடுகளின் அருகில் நின்ற தென்னை மரங்கள் சாய்ந்தன.

மேலும் செய்திகள்