மொரப்பூர் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி

வாகனம் மோதி தொழிலாளி பலி

Update: 2021-04-15 18:12 GMT
மொரப்பூர்:
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ளது எம்.கல்லடிப்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஊமையன் என்ற குல்லு (வயது 65). விவசாய தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை எம்.கல்லடிப்பட்டியில் இருந்து மருதிப்பட்டி ரோட்டில் உள்ள முனியப்பன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது கே.ஈச்சம்பாடியிலிருந்து மொரப்பூர் நோக்கி வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து அறிந்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது மகன் முருகன் மொரப்பூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பெற்று வந்த ஊமையன் என்ற குல்லு நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

மேலும் செய்திகள்