போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

Update: 2021-04-15 18:01 GMT
மேலூர்,ஏப்.
அரசு வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை பணிமனைகளில் ஊழியர்கள் அனைவருக்கும் கொரானா தடுப்பூசி போடும் முகாம் நடைபெறுகிறது. பொன்மேனி, எல்லீஸ்நகர், திருப்புவனம், மதுரை நகர் ஆகிய கிளைகளில் கடந்த 15-ந்தேதி முதல் நாளை வரையும், புதூர் கிளையில் இன்று முதல் 18-ந்தேதி வரையும் தடுப்பூசி போடும் முகாம்கள் நடைபெறுகிறது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுவதாக மதுரை அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி நடராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்