அரசு மருத்துவமனை வளாகத்தில் முதியவர் பிணம்
அரசு மருத்துவமனை வளாகத்தில் முதியவர் பிணமாக கிடந்தார்.
கரூர்
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிணவறை அருகே உள்ள காத்திருப்போர் வளாகத்தில் சுமார் 75 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடந்ததது. இதுகுறித்து மருத்துவமனை இருக்கை மருத்துவர் பசுபதிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் வழக்குப்பதிவு செய்து அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகிறார்.