லாரி டிரைவர், கிளீனரை தாக்கி வழிப்பறி
திருமங்கலம் அருகே லாரி டிரைவர் மற்றும் கிளீனரை தாக்கி கொள்ளையர்கள் வழிப்பறியில் ஈடுபட்டனர். ெதாடர் வழிப்பறி சம்பவங்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருமங்கலம்,ஏப்
திருமங்கலம் அருகே லாரி டிரைவர் மற்றும் கிளீனரை தாக்கி கொள்ளையர்கள் வழிப்பறியில் ஈடுபட்டனர். ெதாடர் வழிப்பறி சம்பவங்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
பழுதாகி நின்ற லாரி
தென்காசி மாவட்டம், திருவேடகத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ஞானதுரை (வயது 40), அதை ஊரைச் சேர்ந்த கிளீனர் மாதவன் மற்றும் 2 சுமை தூக்கும் தொழிலாளர்கள் அரியலூரில் இருந்து லாரியில் சிமெண்டு மூடைகளை ஏற்றிக் கொண்டு நாகர்கோவில் சென்று கொண்டிருந்தனர்.
நள்ளிரவில் திருமங்கலம் அருகே கப்பலூர் நான்கு வழி சாலையில் சென்றபோது லாரி திடீரென பழுதாகி நின்றது. உடனே லாரியை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு அவர்கள் அனைவரும் லாரிக்குள் தூங்கினர்.
தாக்குதல்
அதிகாலை 2 மணி அளவில் 4 வாலிபர்கள் அந்த வழியாக காரில் வந்தனர். அவர்கள் லாரியின் அருகே காரை நிறுத்தி லாரிக்குள் தூங்கிக் கொண்டிருந்த டிரைவர் ஞானதுரை மற்றும் கிளீனரை தட்டி எழுப்பி பணம் கேட்டு அடித்து உதைத்தனர். பணம் இல்லை என்று கூறவே, அவர்கள் இருவரையும் கீழே தள்ளிவிட்டு செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து டிரைவர் ஞானதுரை திருமங்கலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடரும் வழிப்பறி சம்பவங்கள்
திருமங்கலம் பகுதியில் இரவு நேரங்களில் லாரி டிரைவர்களிடம் வழிப்பறிச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் திருமங்கலம் பகுதியை கடக்கும் போது வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே போலீசார் இரவு நேர ரோந்துப்பணியை தீவிரப்படுத்தி வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.