வீடு தேடிச் சென்று கொரோனா பரிசோதனை
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் வீடு தேடிச் சென்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
தேனி :
தேனி மாவட்டம் கம்பம் மாலையம்மாள்புரத்தில் ஒரே குடு்ம்பத்தை சேர்ந்த 3 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து கம்பம் பகுதியில் நகர்புற சுகாதார நிலைய டாக்டர் மீனாட்சிசுந்தரம் தலைமையில் மருத்துவ குழுவினர் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்தனர்.
இந்த நிலையில் நேற்று கம்பம் அரசு மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் 11 மாத குழந்தை உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து கம்பம் பகுதியில் நகராட்சி சுகாதார அலுவலர் அரசக்குமார் தலைமையில் சுகாதார பணியாளர்கள் தெருக்களில் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர்.