கொரோனா விழிப்புணர்வு கூட்டம்

கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடந்தது

Update: 2021-04-15 17:13 GMT
பரமக்குடி, 
பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட எமனேசுவரம் போலீஸ் நிலையம் சார்பில் அந்தபகுதி மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு குறித்த கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு  வேல்முருகன் தலைமை தாங்கினார். எமனேசுவரம் போலீஸ் இன்ஸ் பெக்டர் தமிழ்ச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் அனை வருக்கும் முகக்கவசம், கபசுர குடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்