உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2020 2021ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கான கரும்பு அரவை இன்று தொடங்கப்பட உள்ளது.

உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2020 2021ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கான கரும்பு அரவை இன்று தொடங்கப்பட உள்ளது.

Update: 2021-04-15 16:23 GMT
உடுமலை
உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2020 2021ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கான கரும்பு அரவை இன்று தொடங்கப்பட உள்ளது. இதையொட்டி நேற்று கரும்பு வெட்டும் பணிகள் தொடங்கியது.
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை
உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் உள்ளது அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை. இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாத காலத்தை கரும்பு அரவைப்பருவமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம், பழனி ஆகிய தாலுகாக்களில் உள்ள ஆலை அங்கத்தினர்களான கரும்பு விவசாயிகளிடமிருந்து ஆலைப்பகுதி, குமரலிங்கம், கணியூர், நெய்க்காரப்பட்டி, பழனி ஆகிய கோட்ட கரும்பு அலுவலகங்கள் மூலமாக கரும்பு பதிவு செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 
அதன்படி 2020-2021 கரும்பு அரவைப்பருவத்திற்கு 695ஏக்கர் கன்னி கரும்பும், 1,005 ஏக்கர் கட்டை  கரும்பும் என மொத்தம் 1,700 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதன்மூலம் ஆலை அரவைக்கு 71 ஆயிரம் டன் கரும்பு கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இன்று அரவை தொடக்கம்
இந்த ஆலையில் 2020-2021ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கான கரும்பு அரவை தொடக்கவிழா இன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடக்கிறது. ஆலை அரவைக்கு, கரும்பு வெட்டும் பணிகளுக்கு உள்ளூரில் கரும்பு வெட்டும் ஆட்கள் குறைவு.  அவர்கள் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபடுவார்கள். உள்ளூர் ஆட்கள் போதாது என்பதால் ஒவ்வொரு ஆண்டும் வெளியூர்களை சேர்ந்த கரும்பு வெட்டாட்கள் அழைத்து வரப்படுவார்கள்.அதன்படி வெளியூர்களை சேர்ந்த கரும்பு வெட்டும் ஆட்கள் ஆலைக்கு நேற்றுவந்துள்ளார்கள். அவர்கள் கரும்பு தோட்டங்களில் தங்கியிருந்து கரும்பு வெட்டும் பணியில் ஈடுபடுவார்கள்.
அதன்படி இன்று சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடங்க உள்ளதையொட்டி ஆலைப்பகுதி, குமரலிங்கம், கணியூர் உள்ளிட்ட கோட்டங்களில் உள்ளசில கரும்பு தோட்டங்களில் கரும்பு வெட்டும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டு ஆலைக்கு கொண்டு வரும் பணிகள் நடந்தன. 

மேலும் செய்திகள்