திருப்பூரில் சாயப்பட்டறை உரிமையாளரின் முகத்தில் மிளகாய் பொடி ஸ்பிரே அடித்து ரூ.8 லட்சத்தை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பறித்து சென்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் சாயப்பட்டறை உரிமையாளரின் முகத்தில் மிளகாய் பொடி ஸ்பிரே அடித்து ரூ.8 லட்சத்தை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பறித்து சென்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-04-15 16:11 GMT
வீரபாண்டி
திருப்பூரில் சாயப்பட்டறை உரிமையாளரின் முகத்தில் மிளகாய் பொடி ஸ்பிரே அடித்து ரூ.8 லட்சத்தை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பறித்து சென்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
சாயப்பட்டறை உரிமையாளர்
திருப்பூரை அடுத்த கணபதிபாளையம், குண்ணாங்கல் பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம்  இவர் தனது வீட்டுக்கு அருகே சொந்தமாக சாயப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். சாயப்பட்டறை நிறுவனத்தின் தேவைக்காக பணம் எடுப்பதற்காக நேற்று மதியம் வெங்கடாசலம் தனது காரில் திருப்பூர் பல்லடம் ரோடு வித்யாலயம் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்றார்.
பின்னர் வங்கிக்கு சென்ற வெங்கடாசலம் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.8 லட்சத்தை எடுத்து பணப்பையில் வைத்துக்கொண்டு மதியம் 1 மணி அளவில் வங்கிக்கு முன்புறம் நிறுத்தி இருந்த காரை நோக்கி நடந்து வந்துள்ளார். பின்னர் காரின் பின் கதவை திறந்து பணப்பையை வைக்க முயன்றுள்ளார்.
ரூ.8 லட்சம் பறிப்பு
அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 மர்ம ஆசாமிகள் வந்துள்ளனர். ஒருவர் மட்டும் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி வந்து வெங்கடாசலத்தின் முதுகில் ஓங்கி குத்தியுள்ளார். இதனால் திடுக்கிட்டு திரும்பிய நேரத்தில் வெங்கடாசலத்தின் முகத்தில் மிளகாய் பொடி ஸ்பிரே அடித்துள்ளார். அதன்பின்னர் அவர் கையில் வைத்திருந்த பணப்பையையும் பறித்துக்கொண்டு அந்த ஆசாமி  ஓடினான். இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடாசலம் சத்தம் போட அதற்குள் அங்கு ஏற்கனவே மோட்டார் சைக்கிளில் காத்திருந்தவருடன் அந்த ஆசாமி ஏறி பல்லடம் நோக்கி தப்பிசென்று விட்டான்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்தனர். பின்னர் இதுகுறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், வங்கி முன்பு மற்றும் அந்த பகுதியில் உள்ள கட்டிடங்களின் முன்பு பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி  பணத்தை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
வெங்கடாசலம் வங்கியில் பணம் எடுத்து வருவதை நன்கு நோட்டமிட்டு இந்த வழிப்பறி சம்பவத்தில்மர்ம ஆசாமிகள்  ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
பட்டப்பகலில் வங்கிக்கு முன்பு கவனத்தை திசை திருப்பி சாயப்பட்டறை உரிமையாளரிடம் இருந்து ரூ.8 லட்சத்தை மர்ம ஆசாமிகள் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்