மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் மும்முரம்
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் மும்முரம்.
குன்னூர்,
குன்னூரில் முக்கிய சுற்றுலா தலமாக சிம்ஸ் பூங்கா உள்ளது. இது தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமானது ஆகும். இங்கு மலர் செடிகள் மட்டுமின்றி நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்களும் உள்ளன. இதில் ருத்ராட்சை மரம், காகித மரம், யானைக்கால் மரம் போன்றவை சுற்றுலா பயளிகளை கவர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் கோடை சீசனையொட்டி நடைபெறும் பழக்கண்காட்சிக்காக பூங்காவில் கடந்த ஜனவரி மாதம் 23 ரகங்களை சேர்ந்த 3 லட்சத்து 10 ஆயிரம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டன. மேலும் அங்குள்ள கண்ணாடி மாளிகையில் புதிய மலர் தொட்டிகள் அடுக்கி வைக்கப்படுவது வழக்கம் ஆகும்.
இதன் அடிப்படையில் இந்த ஆண்டு 3 ஆயிரம் மலர் நாற்றுக்களை தொட்டியில் வைத்து கண்ணாடி மாளிகையில் அடுக்கி வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக பூங்கா நர்சரியில் மலர் நாற்றுக்களை பராமரிக்கும் பணி ஊழியர்களால் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கிறது.