அருணாசலேஸ்வரர் கோவிலில் டி.டி.வி. தினகரன் சாமி தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் டி.டி.வி. தினகரன் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2021-04-15 11:49 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது மனைவியுடன்  அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மன் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார். 

அதைத் தொடர்ந்து அவர்கள், ஜூன் மாதம் நடைபெற உள்ள தங்களது மகள் திருமணத்தை முன்னிட்டு கோவிலில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண மண்டபத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் செய்திகள்