1944-ம் ஆண்டு நடந்த வெடி விபத்து சம்பவம்: சென்னையில் தீயணைப்பு வீரர்கள் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி

1944-ம் ஆண்டு நடந்த வெடி விபத்து சம்பவம்: சென்னையில் தீயணைப்பு வீரர்கள் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.

Update: 2021-04-15 00:53 GMT
சென்னை, 

மும்பை துறைமுகத்தில் கடந்த 1944-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந்தேதி நிறுத்தப்பட்டிருந்த ‘எஸ்.எஸ். போர்ட் ஸ்ட்ரைக்கின்’ என்ற வெடி பொருட்களை ஏற்றி வந்த கப்பல் தீவிபத்துக்குள்ளானது. அப்போது தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட போது எதிர்பாராதவிதமாக கப்பல் வெடித்து சிதறியது.

இந்த சம்பவத்தில் 66 தீயணைப்பு வீரர்கள் மரணமடைந்தனர். மேலும் வெடி விபத்தில் சிக்கி 336 பேர் இறந்தனர். 1,040 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து இந்திய தீயணைப்பு துறை வரலாற்றில் மிக மோசமான விபத்தாக கருதப்படுகிறது. அந்தவகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ந்தேதி விபத்தில் பலியான வீரர்களுக்கு ‘தியாகிகள் தினம்’ அனுசரிக்கப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று தீயணைப்போர் தொண்டு நாளை முன்னிட்டு தீ விபத்தை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சுமார் 50 தீயணைப்பு வீரர்கள் 200 கி.மீ தூரம் சைக்கிள் பேரணி சென்றனர். தாம்பரம் மாநில பயிற்சி மையத்தில் தீயணைப்பு துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு தொடங்கி வைத்த இந்த பேரணி, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், மகாபலிபுரம் வழியாக மீண்டும் தாம்பரம் வந்து சேர்ந்தது.

மேலும் செய்திகள்