தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய வேனால் பரபரப்பு

தாறுமாறாக ஓடிய வேனால் பரபரப்பு

Update: 2021-04-14 22:59 GMT
இளம்பிள்ளை:
கோவையில் இருந்து சேலம் நோக்கி தனியார் பார்சல் வேன் ஒன்று நேற்று மதியம் காக்காபாளையம் அருகே வந்து கொண்டிருந்தது. அதனை ராசிபுரத்தை சேர்ந்த கிரிவாசன் ஓட்டி வந்தார். பெட்ரோல் விற்பனை நிைலய இணைப்பு சாலை பிரிவு அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பார்சல் வேன் தாறுமாறாக ஓடியது. அந்த வேன், தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் ஏறிச்சென்றது. 
மேலும் அங்கிருந்த போக்குவரத்து சிக்னல், எச்சரிக்கை பலகை, சோலார் மின்விளக்கு கம்பங்கள் ஆகியவற்றை மோதி உடைத்து சென்று நின்றது. இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மகுடஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தேசிய ெநடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய வேனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்