ரெட்டியாப்பட்டியில் காளகஸ்திநாதர் மூலஸ்தானத்தின் மேல் சூரியஒளி

ரெட்டியாப்பட்டியில் காளகஸ்திநாதர் மூலஸ்தானத்தின் மேல் சூரியஒளி படர்ந்தது

Update: 2021-04-14 21:12 GMT
உப்பிலியபுரம், 
உப்பிலிபுரத்தை அடுத்துள்ள ரெட்டியாப்பட்டியில் மரகதவல்லி தாயார் உடனுறை காளகஸ்திநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு 27 நட்சத்திரங்களுக்குரிய அதிதேவதைகள், அவைகளுக்குரிய மரங்களுடன் அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும். இங்கு சித்திரை முதல் நாள் அன்று சிவலிங்கத்தின் மீது சூரியஒளி வீசும் அபூர்வ நிகழ்வு ஆண்டு தோறும் நடைபெறும். அதன்படி சித்திரை மாதம் முதல் நாளான நேற்று காலை 6.15 மணி முதல் 6.20 மணி வரை சூரிய ஒளி மூலவர் மீது விழுந்தது. முன்னதாக அதிகாலையில் மரகதவல்லி தாயாருக்கும், காளகஸ்திநாதருக்கும் மற்றும் 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கும் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. கோ பூஜையும் நடத்தப்பட்டது. அப்போது பக்தர்கள் ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய என பக்தி கோஷம் எழுப்பினர். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நிகழும் இந்த அரிய காட்சியை நூற்றுக்கணக்கான பக்தர்கள் பார்த்து தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்