மாவூற்று உதயகிரி நாதர் கோவில் தெப்பத்தில் புனித நீராடிய பக்தர்கள்

வத்திராயிருப்பு அருகே உள்ள மாவூற்று உதயகிரிநாதர் கோவில் தெப்பத்தில் தமிழ்ப்புத்தாண்டையொட்டி பக்தர்கள் புனித நீராடினர்.

Update: 2021-04-14 20:44 GMT
வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு அருகே உள்ள மாவூற்று உதயகிரிநாதர் கோவில் தெப்பத்தில் தமிழ்ப்புத்தாண்டையொட்டி பக்தர்கள் புனித நீராடினர். 
உதயகிரி நாதர்
 வத்திராயிருப்பு அருகே மாவூற்று பகுதியில் உதயகிரி நாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமையானது. 
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் இந்த  கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும்  பக்தர்கள் இங்குள்ள தெப்பத்தில் நீராடி விட்டு பின்னர் உதயகிரி நாதர் சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம். 
புனித நீராடினர் 
அதேபோல நேற்று தமிழ்ப்புத்தாண்டையொட்டி வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் மாவூற்று உதயகிரி நாதர் கோவில் தெப்பத்தில் புனித நீராடினர். 
பின்னர் உதயகிரி நாதர் சுவாமியை தரிசனம் செய்தனர். 

மேலும் செய்திகள்